ஆண் குழந்தைக்காக பொது இடத்தில் மனைவியை நிர்வாணமாக்கி கணவன் செய்த காரியம். போலீ சாமியாரால் நேர்ந்த அசிங்கம்.

Published : Aug 23, 2022, 02:09 PM ISTUpdated : Aug 23, 2022, 02:16 PM IST
ஆண் குழந்தைக்காக பொது இடத்தில் மனைவியை நிர்வாணமாக்கி கணவன் செய்த காரியம். போலீ சாமியாரால் நேர்ந்த அசிங்கம்.

சுருக்கம்

ஆண் குழந்தைக்காக அனைவர் முன்னிலையிலும் அருவியில் மனைவியை நிர்வாணமாக குளிக்கச் சொல்லி கணவன், மாமியார் வீட்டினர் டார்ச்சர் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

ஆண் குழந்தைக்காக அனைவர் முன்னிலையிலும் அருவியில் மனைவியை நிர்வாணமாக குளிக்கச் சொல்லி கணவன், மாமியார் வீட்டினர் டார்ச்சர் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலி சாமியார் ஒருவர் சொன்னதின் அடிப்படையில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அவைகள் ஒவ்வொன்றும் பல விதங்களில் நடக்கிறது, இந்த வரிசையில் மனைவியை வரதட்சனை வாங்கிவரச்சொல்லி கொடுமை செய்துவந்த கணவன்,போலி சாமியார் சொன்னதின் அடிப்படையில் ஆண் குழந்தைக்காக மனைவியை நிர்வாணமாக குளிக்க வைத்த கொடூரம் நடந்ததுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு பெண்ணுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது, பிறகு கணவனின் சுயரூபம் தெரியவந்தது.

இதையும் படியுங்கள்: வேளாங்கண்ணிக்கு நடைபயணம் சென்ற சென்னை கல்லூரி மாணவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை..!

தனக்கு ஆண் குழந்தை பெற்றுத் தரவேண்டும் என்றும் கணவன் டார்ச்சர் செய்து வந்தார், மறுபுறம் வியாபாரத்தில்  நஷ்டம் ஏற்பட்டுவிட்டதால் தாய் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வரச் சொல்லி மனைவியை அவர் கொடுமை செய்து வந்தார். மறுபுறம் கடன் தொல்லையாலும் அவர் அவதிப்பட்டு வந்தார் , தனக்குள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர அப்பகுதியில் உள்ள பிரபல போலி சாமியார் ஒருவரை அணுகினார்.

இதையும் படியுங்கள்: பள்ளிக்கூடத்தை விட ஜெயிலே மேல்... மாணவன் எடுத்த பயங்கர முடிவு... 13 வயது நண்பனின் தொண்டையை அறுத்து கொலை.

அடிக்கடி போலி சாமியார் அமானுஷ்ய வழிபாடுகளையும் செய்து வந்தார், இந்நிலையில் போலி சாமியார் மௌலானா பாபா,  உன் மனைவிக்கு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் எனில் அருவிக்கு அழைத்துச்சென்று அனைவரும் பார்க்கும்படி மனைவியை நிர்வாணமாக குளிப்பாட்டினால் ஆண் குழந்தை பிறக்கும், கடன் தொல்லை தீரும் என கூறினார், அதை கண்மூடித்தனமாக நம்பிய  கணவன் மற்றும் மாமியார் விட்டார் அந்தப் பெண்ணை ராய்காட் அருவிக்கு அழைத்துச் சென்றனர், அங்கு உள்ள நீர்வீழ்ச்சியில் அந்தப் பெண்ணை நிர்வாணமாக குளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர்.

ஆனால் அந்த பெண் அதை ஏற்க மறுத்தார், அந்தப் பெண்ணின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கழட்டி குளிக்கச் சொல்லி கொடுமைப்படுத்தினர். இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், அருகில் உள்ள பாரதி வித்யாபீட் காவல் நிலையத்திற்கு சென்று கணவன் மற்றும் மாமியார் குடும்பத்தின் மீது புகார் தெரிவித்தார் தகவலறிந்த சாமியார் தலைமறைவானார், கணவன் மற்றும் மாமியார் குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர், தலைமறைவான போலி சாமியாரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!