கார் டிரைவரை திருமணம் செய்து சொகுசாக வாழ கணவர் வீட்டில் கொள்ளை... தெய்வமகள் சீரியல் நடிகைக்கு வலைவீச்சு..!

Published : Sep 16, 2020, 11:30 AM IST
கார் டிரைவரை திருமணம் செய்து சொகுசாக வாழ கணவர் வீட்டில் கொள்ளை... தெய்வமகள் சீரியல் நடிகைக்கு வலைவீச்சு..!

சுருக்கம்

இந்த பழக்கம் நெருக்கமான நிலையில் வீட்டிற்கு தெரியாமல் நடிகை சுசித்ரா ரகசியமாக திருமணம் செய்து கொண்ட மணிகண்டன் அங்கு தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளார். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு பகுதியை சேர்ந்த விவசாயி தேசிங்கு. இவர் தனது மனைவியுடன் தோட்டத்திற்கு சென்ற நேரத்தில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 18 பவுன் நகை கொள்ளை போனதாக வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
விவசாயி புகார் தொடர்பாக ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் புகார் அளித்த தேசிங்கு மகன் மணிகண்டனின் மகன் நடவடிக்கையில் சந்தேகம் எழவே அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தபோது கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் குறும்படம் ஒன்று மறைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்து விட்டு சென்னைக்கு சென்ற மணிகண்டன் அங்கு டிவி சீரியல் நடிகர் நடிகைகளை படப்பிடிப்புக்கு அழைத்து செல்லும் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது தெய்வமகள் சீரியலில் அகிலாவுக்கு மாறு வேடத்தில் நடித்த சுசித்ரா என்ற நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நெருக்கமான நிலையில் வீட்டிற்கு தெரியாமல் நடிகை சுசித்ரா ரகசியமாக திருமணம் செய்து கொண்ட மணிகண்டன் அங்கு தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளார். கொரொனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாததால் செலவுக்கு பணமில்லாமல் கடுமையான கஷ்டத்தில் தவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தியன்று சொந்த ஊருக்கு நடுவே சித்ராவை அழைத்து சென்றுள்ளார் மணிகண்டன். அப்போது வீட்டின் பீரோவில் நிறைய நகை மற்றும் பணம் இருப்பதை பார்த்ததும் அதனை எடுத்து சென்று விற்று அந்தப் பணத்தைக் கொண்டு தான் கதாநாயகியாக நடித்து குறும் படத்தை தயாரித்து யூடியூபில் பதிவேற்றம் செய்து சம்பாதிக்கலாம் என்று திருட்டுக்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார் சுசித்ரா.

 மனைவி சுசித்ராவை சென்னையில் விட்டுவிட்டு தனியாக சொந்த ஊருக்கு சென்ற மணிகண்டன் தன் தந்தையும் தாயும் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு செல்லும் வரை காத்திருந்து அவர்கள் சென்றவுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 18 சவரன் நகைகளையும் 50 ஆயிரம் ரூபாயும் திருடியதாக திருட்டு நகைகளை விற்ற பணத்துடன் மனைவிக்காக காத்திருந்த நிலையில் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

 இதற்கிடையே கொள்ளை திட்டத்துடன் ஊருக்கு சென்ற காதல் கணவன் கையும் களவுமாக போலீசில் சிக்கிய தகவல் அறிந்ததும் கொலை திட்டம் வகுத்துக் கொடுத்த சீரியல் நடிகை சுசித்ரா சாமர்த்தியமாக தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தலைமறைவாக உள்ள நடிகை சுசித்ராவின் உண்மையான பெயர் பரமேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. அவரை தேடி தனிப்படை சென்னை விரைந்துள்ளது.

மெகா சீரியல் தயாரிக்கும் ஆசையில் களவாணி ஆகி காதலன் கடலூரில் கம்பி எண்ணி கொண்டிருக்குகொள்ளை திட்டம் வகுத்துக் கொடுத்த சீரியல் நடிகை சுசித்ரா போலீசுக்கு பயந்து தப்பி ஓடி வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!