கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள்... நித்யானந்தாவின் அடி மடியில் கைவைக்கும் சிஷ்யன்கள்..!

Published : Sep 15, 2020, 04:49 PM IST
கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வையுங்கள்... நித்யானந்தாவின் அடி மடியில் கைவைக்கும் சிஷ்யன்கள்..!

சுருக்கம்

கைலாசா நாட்டு இளம்பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது சிஷ்யர்கள்  நித்யானந்தாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 

கைலாசா நாட்டு இளம்பெண்களை திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது சிஷ்யர்கள்  நித்யானந்தாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 

திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை போன்ற கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருமண வேண்டுகோள் என்று தலைப்பிட்ட அந்த கடிதத்தில், ’’அனுப்புதல் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள், தமிழ்நாடு. பெறுதல் சுவாமி நித்தியானந்தா, கைலாசா நாட்டு அதிபர், கைலாசா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ’’சுவாமி, 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம்.

தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் தங்கள் சிஷ்யன்கள் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நித்யானந்தாவையும், தற்போது அவர் உள்ள கைலாசா என்ற இடம் மற்றும் அவருடைய பெண் சிஷ்யர்கள் பற்றியும் ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது 1990-ம் ஆண்டில் பிறந்தவர்கள் என்ற பெயரில் திருமணமாகாமல் மன உளைச்சலில் உள்ள எங்களுக்கு கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு கோரிக்கை விடுத்து அனுப்பப்படுவது போன்ற கடிதம் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!