மனைவி அதற்கு மறுத்ததால். ஆடைகளை அவிழ்த்து, கை கால்களை கட்டி, அந்தரங்க உறுப்பில் ஃபெவிக்குவிக் ஊற்றி அசிங்கம்.

Published : Sep 16, 2022, 06:39 PM IST
 மனைவி அதற்கு மறுத்ததால். ஆடைகளை அவிழ்த்து, கை கால்களை கட்டி, அந்தரங்க உறுப்பில் ஃபெவிக்குவிக் ஊற்றி அசிங்கம்.

சுருக்கம்

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் அந்தரங்க உறுப்பில்  ஃபெவிக்குவிக் ஊற்றி கணவன் கொடுமை செய்துள்ளார் சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த கொடூரம் நடந்துள்ளது .  

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் அந்தரங்க உறுப்பில்  ஃபெவிக்குவிக் ஊற்றி கணவன் கொடுமை செய்துள்ளார் சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

திருமணமான ஒரு பெண் தனது கணவனுடன் மகிழ்ச்சியாக வாழ போவதாக ஆயிரம் கனவுகளுடன் இருந்துவந்தார். அப்போது திடீரென கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது, மனைவியை சரமாரியாக தாக்கிய கணவன் கோபத்தின் உச்சியில் மனைவியின் கைகளை கட்டிப்போட்டு ஆடைகளை அவிழ்த்து அந்தரங்க உறுப்பில் பெவிக்விக் ஊற்றி ஒட்டியுள்ள கொடூரம் நடந்துள்ளது. மனைவியின் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் சம்பவம் நடந்துவிட்டது.

முழு விவரம் பின்வருமாறு:- மத்தியப்பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்திலுள்ள கோட்வால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென் ஹாஸ்டல் பகுதியில் வசிப்பவர் ரத்தோர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது. சில வருடங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது, அவரை மணந்த அந்தப் பெண் தன் வாழ்நாள் முழுவதும் இதேபோல மகிழ்ச்சியாக வாழப் போவதாக எண்ணினார், ஆனால் கணவன் நாளடைவில் தனது உண்மை முகத்தை காட்ட ஆரம்பித்தார்.

அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இந்நிலையில் கடந்தசில தினங்களுக்கு முன்னர் மதியம் வீட்டில் சுத்தமாக குளித்துவிட்டு உடைகளை அணிந்து கொண்டு வெளியே புறப்பட தயாரானார் கணவர், சிறிது நேரத்தில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது, இதில் ஆத்திரம் அடைந்த ரத்தோர் மனைவியை கடுமையாக அடித்து உதைத்தார். மனைவிக்குச் சரியான பாடம் புகட்டவதாக எச்சரித்த அவர், மனைவியின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கினார், பின்னர் மனைவியின் கை கால்களை கட்டினார், வீட்டில் இருந்த ஃபெவிக்விக்கை எடுத்து மனைவியின் அந்தரங்க உறுப்பில்  ஊற்றி சாடிஸ்ட் போல நடந்துகொண்டார்.

அப்போது மனைவி அவமானம் தாங்க முடியாமல் அலறினார், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மனைவியின் அந்தரங்க உறுப்பில் கணவனின் ஃபெவிக்விக் ஊற்றிய காரணம் குறித்து அப்பகுதி மக்கள் விசாரித்தனர், போதைக்கு அடிமையானதால் குடிக்கப் பணம் கேட்ட தாகவும் அதற்கு மனைவி பணம் தர மறுத்ததால், அக்கொடூரத்தில் ஈடுபட்டதும்  தெரியவந்தது. இந்நிலையில், போலீசார் கணவன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி