உடலுறவு கொள்வதில் கணவனுக்கும், பெண்ணுக்கும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு வீரராஜ் வர்தன் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண்ணின் முதல் கணவர் கார் விபத்தில் இறந்துவிட்டார். பிறகு பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை தேடி, கடைசியில் மேட்ரிமோனியல் தளத்தில் வீரராஜ் வர்தனை சந்தித்து திருமணம் செய்து கொண்டார்.
அந்தப் பெண்ணுக்கு முதல் கணவரிடமிருந்து 14 வயது மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அந்த பெண்ணுடன் பல மாதங்களாக உடலுறவு கொள்ள வீரராஜ் மறுத்துவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு..“சமூக நீதி வரலாற்றில் சாதனை.! முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு !”
இறுதியாக அந்தப் பெண் இந்த விஷயத்தை பற்றி விசாரித்த போது, பல ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து பாலியல் திறனை இழந்ததாகவும் கணவர் ஏமாற்றி வந்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது.
பின்னர், 2020ஆம் ஆண்டில், எடையைக் குறைப்பதன் ஒரு பகுதியாக, இளம் பெண்ணின் கணவருக்கு மீண்டும் கொல்கத்தாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த பெண் மீண்டும் இதுபற்றி துருவி துருவி கேட்டபோது வீரராஜ் உண்மையை வெளிப்படுத்தினார். தான் ஒரு பெண்ணாக இருந்ததாகவும், பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..“120 கோடியில் திருமணம்..ஜெயலலிதா போல ஜெயிலுக்கு போவார் அமைச்சர் மூர்த்தி - திகில் கிளப்பும் சவுக்கு சங்கர் !”
இந்த அதிர்ச்சியான விஷயத்தை கேட்ட அந்த பெண்ணின் புகாரின் பேரில் கோத்ரி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் ஒரு பகுதியாக, டெல்லியைச் சேர்ந்த கணவர், வதோதராவுக்கு அழைத்து வரப்படுவார் என்று காவல் ஆய்வாளர் எம்.கே. குர்ஜார் கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..குழந்தை பிறப்பது எப்படி தெரியுமா? .. அக்கவுண்டன்சி ஆசிரியரை சிக்க வைத்த பள்ளி மாணவிகள் - திடீர் திருப்பம்