குழந்தை பிறப்பது எப்படி தெரியுமா? .. அக்கவுண்டன்சி ஆசிரியரை சிக்க வைத்த பள்ளி மாணவிகள் - திடீர் திருப்பம்

By Raghupati RFirst Published Sep 16, 2022, 3:35 PM IST
Highlights

சினிமா பாடல் எழுதியதை கண்டித்த ஆசிரியரை மாணவிகள் பழிவாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி ஆசிரியராக இருக்கிறார் கிறிஸ்துதாஸ்.

இவர் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தியதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளித்தனர்.

மேலும் செய்திகளுக்கு..உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை.. 23 அடி உயரம், 15 டன் எடை.. கும்பகோணத்தில் குவிந்த பக்தர்கள் !!

இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் திருப்பமாக ஆசிரியருக்கு ஆதரவாக அவர் மீது பதியப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து பேசிய ஆசிரியர்கள் சிலர், ‘ மாணவிகள் சிலர் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு சினிமா பாடல் எழுதியதை கண்டித்த ஆசிரியர், அதனை அனைவர் மத்தியில் படித்து காண்பித்துள்ளார். மேலும் தவறு செய்த மாணவிகளை வீட்டிலிருந்து பெற்றோரை அழைத்து வர கூறிய நிலையில் தேவையில்லாமல் மாணவிகள் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..“120 கோடியில் திருமணம்..ஜெயலலிதா போல ஜெயிலுக்கு போவார் அமைச்சர் மூர்த்தி - திகில் கிளப்பும் சவுக்கு சங்கர் !”

அதன் அடிப்படையில் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் ஆசிரியர் மீது சிலரின் தனிப்பட்ட அழுத்தம் காரணமாக போக்சோ சட்டம் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“சமூக நீதி வரலாற்றில் சாதனை.! முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு !”

click me!