அரசு பள்ளி மாணவிகளிடம் அக்கவுண்டன்சி ஆசிரியர் ஆபாச பாடம்.. அலேக்கா தூக்கி உள்ளே வைத்த போலீஸ்..!

Published : Sep 16, 2022, 11:06 AM IST
அரசு பள்ளி மாணவிகளிடம் அக்கவுண்டன்சி ஆசிரியர் ஆபாச பாடம்.. அலேக்கா தூக்கி உள்ளே வைத்த போலீஸ்..!

சுருக்கம்

பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில்  11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவர் மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது.

கன்னியாகுமரி அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் ஆபாச பாடம் நடத்தியதாக எழுந்த புகாரை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர் போச்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் குறைந்தபாடியில்லை. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில்  11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவர் மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது.

 

இந்த சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் இது குறித்து சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால், ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து தலைமை ஆசிரியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி முன்பு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஆசிரியர் கிறிஸ்துதாஸை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?