போதையில் 140 கிலோ மீட்டர் ஸ்பீடு!தூக்கி வீசப்பட்ட பெண் IT ஊழியர்கள் பலி!விபத்தை ஏற்படுத்தியவர் யார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Sep 16, 2022, 7:31 AM IST

சென்னையில் ஓம்ஆரில் குடிபோதையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு இளம்பெண் மென்பொறியாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.


சென்னையில் ஓம்ஆரில் குடிபோதையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு இளம்பெண் மென்பொறியாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் பிரமுகரின் உறவினரும், பிரபல ஓட்டல் அதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அக்காததாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமியும் (23, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ரெட்டிகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த லாவண்யா (23) என்பவரும் சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள எச்.சி.எல் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 14ம் தேதி இரவு பணி முடிந்து தாங்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் பயங்கரம்! ஒரே நேரத்தில் சீரிய 3 குண்டுகள்! சிதறிய மூளை! ரத்த வெள்ளத்தில் விமானப்படை வீரர் பலி.!

அப்போது, சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கேளம்பாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஹோண்டா சிட்டி சொகுசு கார் மென்பொறியாளர்கள் மீது மோதியது. இதில், இருவரும் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளதத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். 

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரீலட்சுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதைத்தொடர்ந்து லாவண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்,  சிகிச்சை பலனின்றி லாவண்யாவும் நேற்று உயிரிழந்தார். 

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய மோதிஷ் குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அரசியல் பிரமுகரின் உறவினரும், பிரபல ஓட்டல் அதிபரின்  மகன் மோத்தீஸ்குமார் (20) என்பதும் தெரியவந்தது. நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று மது போதையில் வந்து தாறுமாறாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளார். வெளிமாநிலத்திலிருந்து சென்னை வந்து தங்கி வேலைப்பார்த்த இளம்பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  சுற்றுலா வேன் மீது பள்ளி வாகனம் பயங்கர மோதல்.. கண்ணாடி சிதறி வெளியே விழுந்த பெண்.. பகீர் சிசிடிவி காட்சிகள்.!

click me!