“முந்திரி தோப்பில்” நகைக்காக நடு இரவில் நடந்த பகீர் கொலை.. அதிர வைக்கும் பின்னணி !!

By Raghupati R  |  First Published Feb 17, 2023, 4:27 PM IST

மாமல்லபுரம் அருகே வயதான தம்பதியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி முந்திரிதோப்பு பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மனைவி பெயர் ஜானகி. இவர்கள்  இவர்களின் பிள்ளைகள் அனைவரும் திருமணம் முடிந்து செட்டில் ஆகிவிட்டனர்.

அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து பராமரித்து அங்கேயே தனியாக வசித்து வந்தனர்.  இந்த நிலையில் இவர்களது  மகன் ஒருவர் இவர்களை பார்க்க வழக்கம் போல வந்துள்ளார். வீட்டில் எங்கும் காணாமல் போனதால், அருகில் தேடி பார்த்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..இப்படித்தான் இருக்கு 21 மாத திராவிட மாடல் ஆட்சி.? ஓபிஎஸ் கொடுத்த திடீர் ட்விஸ்ட் - அதிர்ச்சியில் திமுக !!

வீட்டிற்கு வெளியே இடது புறத்தில் சகாதேவன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. உடனே மாமல்லபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், சகாதேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வீட்டில் இருந்த தாய் ஜானகி மாயமாகி இருந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் முந்திரி தோட்டத்தில் உள்ள முட்புதரில் ஜானகி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிறகு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜானகி உடலில் இருந்த சுமார் 5 பவுன் தங்கநகைகள் மாயமாகியிருப்பது தெரிய வந்துள்ளது. நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Erode East Election : பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா.? எடப்பாடி பழனிசாமி அதிரடி !

click me!