வாட்ஸ் அப் மூலம் வந்த இணைப்பை அழுத்தியதால் ஒரு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், கடனை தவணை முறையில் ஒரு லட்ச ரூபாய் செலுத்த தவறினால் குடும்ப புகைப்படம் மற்றும் நண்பர்களுக்கு தவறான தகவல்களை அனுப்புவோம் என மர்ம நபர்கள் மிரட்டல் விடுப்பதாக வாலிபர் புகார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அடுத்த கரையங்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் சௌந்தர். இவர் சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய செல்போனுக்கு நேற்று மாலை தனியார் வங்கி பெயரில் லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை அவர் கிளிக் செய்துள்ளார். அதன் பின்னர் உடனடியாக வாட்ஸ் அப் மூலமாக தாங்கள் ஒரு லட்ச ரூபாய் தங்களிடம் கடன் பெற்றுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
மேலும் அந்த ஒரு லட்ச ரூபாய் தொகையை 6800 ரூபாய் வீதம் மாதம் தோறும் தவணை முறையில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் அந்த வாலிபர் தான் உங்களிடம் எந்த கடனும் வாங்கவில்லை என கூறியதற்கு, தங்களுடைய குடும்ப புகைப்படம் மற்றும் நண்பர்களுடைய விவரங்கள் அனைத்தும் தங்களிடம் உள்ளது. நீங்கள் தவணை முறையில் பணம் செலுத்த தவறினால் குடும்ப புகைப்படங்களை தவறாக சித்தரித்து தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவோம் என மிரட்டும் தொனியில் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவதாக சேலம் மாநகர காவல் கண்காணிப்பாளரிடம் அந்த வாலிபர் புகார் தெரிவித்துள்ளார்.
அடுக்கடுக்காக துப்பாக்கிகள், கொத்து கொத்தாக தோட்டாக்கள்; காவலர்களை மிரலவிட்ட மர்ம நபர்கள்
இது தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இணையதளம் மூலம் வந்த லிங்கை கிளிக் செய்த வாலிபரின் ஒரு லட்ச ரூபாய் கேட்டு அவரின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் நண்பர்களின் தொடர்பு எண்களை வைத்து மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக மீனவர் பலி