பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுஜய் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ள நிலையில் திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுஜய் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ள நிலையில் திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் இவர் பொள்ளாச்சி அடுத்த கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே கர்ப்பமானதை அடுத்து அவரது மனைவி பிரசவத்துக்காக கேரளாவில் உள்ள அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இடையர்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி என்பவர் டி.கோட்டாம்பட்டியில் உள்ள தனது ஆண் நண்பர் சுஜய் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: கண்ட இடத்தில் கை வைத்து டீச்சர் செய்த டார்ச்சர்.. மாணவன் என்ன செய்தான் தெரியுமா?
அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுஜய் சுப்புலட்சுமியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சுஜயை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சுஜய், ரேஷ்மாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, சுப்புலட்சுமியுடன் ஆறு ஆண்டுகளாக பழகி வந்ததும், இது தொடர்பான பிரச்சனையில் சுஜய் சுப்புலட்சுமியை, வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்திருப்பதும் அவரது மனைவி ரேஷ்மா அதற்கு உடந்தையாக இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: திருச்சி விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கொலை விவகாரம்; சிறுவன் உள்பட 6 பேர் கைது
இதை அடுத்து கேரளாவில் உள்ள தனது மாமியார் வீட்டில் சுஜய் பதுங்கி இருந்தது தெரியவந்ததை அடுத்து கேரளா விரைந்த தனிப்படை போலீஸார், சுஜய் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தினர். அப்போது சுஜய் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா ஆகிய இருவரும் தாங்கள்தான் கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர். இதனால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். இதனிடையே கொலை செய்தவர் சுஜயின் மனைவி ரேஷ்மா என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தல் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.