
கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனை ஊழியர் கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு அதிரடி சட்டங்கள் மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் குறையவில்லை. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் கடந்த 7ம் தேதி 3 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இரவில் மருத்துவமனையின் கழிவறைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் கழிவறைக்குள் நுழைந்த மருத்துவமனையின் ஊழியர் கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் பெண்ணை வாயை பொத்தி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரிடம் தப்பித்த பெண் கூச்சலிட்டதை அடுத்து அந்த ஊழியர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கணவரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, இருவரும் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 மாத கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனை ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.