அதிர்ச்சி..! லஞ்சம் கேட்டு வட்டாட்சியர் தொல்லை.. வாலிபர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை..

Published : May 12, 2022, 12:44 PM IST
அதிர்ச்சி..! லஞ்சம் கேட்டு வட்டாட்சியர் தொல்லை.. வாலிபர் பூச்சிமருந்து குடித்து தற்கொலை..

சுருக்கம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்க லஞ்சம் கேட்டு தொல்லை செய்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்க லஞ்சம் கேட்டு தொல்லை செய்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், இதற்கான தொகை ரூ. 2.75 லட்சம் பணமும் 6 தவணைகளாக வழங்கப்படும். இந்த நிலையில் முதல் தவணை பணத்தை, வங்கி கணக்கில் ஏற்றுவதற்கு நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரன் லஞ்சம் கேட்டுள்ளார். 

இதனையடுத்து முதல் தவணை பணத்தை விடுவிப்பதற்கு ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.  பின்னர், இரண்டாவது தவணை பணம் வந்தவுடன், அதனை வங்கிகணக்கில் ஏற்றாமல் லஞ்சம் கேட்டு இழுத்தடிப்பு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், நேற்று மாலை தனது வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். 

மேலும் படிக்க: பசிக்கு காசு கேட்ட 6 வயது சிறுவன்.. கழுத்தை நெறித்து கொலை செய்த போலீஸ் கைது...! ம.பி.யில் பரபரப்பு

இறப்பதற்கு முன்பாக, தனது தற்கொலை காரணம் யார்..? எதனால் இந்த முடிவிற்கு வந்தேன்..? என்று வீடியோவில் பேசி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை பார்த்து பதறி அடித்து ஓடி வந்த உறவினர்கள், அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் , இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து பேரளம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளான, நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: சற்றுமுன் தகவல்.. வெள்ளிக்கிழமை ரேஷன் கடை இயங்குமா.?ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் அறிவிப்பு..

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை