குளியல் அறையில் வைத்து திருமணமான பெண் பாலியல் வன்புணர்வு.. காரியம் முடிந்ததும் தலையில் அடித்து கொலை.

Published : May 11, 2022, 06:09 PM IST
 குளியல் அறையில் வைத்து திருமணமான பெண் பாலியல் வன்புணர்வு.. காரியம் முடிந்ததும் தலையில் அடித்து கொலை.

சுருக்கம்

கணவன் வீட்டில் இல்லாத போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணை கற்பழித்து, அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.  

கணவன் வீட்டில் இல்லாத போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணை கற்பழித்து, அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அதாவது ஹைதராபாத் புற நகரில் உள்ள  ரங்கா ரெட்டி மற்றும் யாதாத்ரி புவனேஸ்வர் மாவட்டங்களின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்த கொடூரம் நடந்துள்ளது.கர்னூல் மாவட்டம் கோடூர் மண்டலம் கர்ரென்னபண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் முதவத் கிருஷ்ணா (28) இவருக்கும் லாவண்யா என்ற ஷ்ரவ்யாவுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கிருஷ்ணா உள்ளூரில் கூலி வேலை செய்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் பணி நிமித்தமாக மனையுடன் குடிபெயர்ந்தார். இருவருக்கும் குழந்தை இன்மை காரணமாக  அங்கு நங்கி வேலை செய்த படியே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தனர்.

செளதாப்பால் மண்டலம் துபிரான்பேட்டை  புறநகரில் உள்ள ஒரு குடோனில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார் கிருஷணா, அந்தக் கிடங்கிற்கு பின் அறையில் குடும்பத்துடன் தங்கி வந்தார், கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி லாவண்யாவை கிடங்கில் விட்டுவிட்டு அசோகா பொறியியல் கல்லூரியில் கிருஷ்ணா வாட்ச்மேனாக  சேர்ந்தார். லாவண்யா கிடங்கில் தனியாக இருந்தார். காலை 7:40 மணிக்கு கல்லூரிக்கு செல்லும் கிருஷ்ணா இரவு 8: 40 மணிக்கு வீடு திரும்புவார். இந்நிலையில் கிடங்கிற்கு பின்புறம் சிமெண்ட் டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அங்கே இருந்த அறைகளில் தொழிலாளர்களும் மற்றவர்களும் வாடகை இருந்து வந்தனர். சங்கரெடி மாவட்டத்தில் உள்ள ஜஹிரா பாத்தைச் சேர்ந்த  ஹரிஷ் அங்கு தங்கி வேலை செய்து வந்தார். லாவண்யா தனியாக இருப்பதை பார்த்து திங்கட்கிழமை ஷரிஷ் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

லாவண்யா குளியலறைக்கு வருவதை பார்த்த ஹரிஷ் அறைக்குள் நுழைந்து அவரை கட்டிப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு அவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார், ஆனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் தலையில் செங்கல் மற்றும் கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டார், இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி மற்றும்  வெள்ளி செயின்களும் அறுக்கப்பட்டது, திங்கட்கிழமை இரவு பணியில் இருந்து வீடு திரும்பிய கிருஷ்ணா, மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவியை தேடியபோது அவர் குளியல் அறையை ஒட்டிய கொட்டகையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். அதைக் கண்டு கதறி அழுத கணவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவ்விடத்தை ஆய்வு செய்தனர். அங்கே ஒரு ஆணின் செருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

அது தவிர வேறு எந்த ஆதாரமும் அங்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் உடல் செளதாப்பால் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.  பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரசிரித்து வந்தனர். கிடைத்த ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தியதில் துபிரான்பேட்டை புறநகர்ப் பகுதியில் தச்சுத் தொழிலாளியான அரிஷ் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது அறையிலிருந்து வாலண்யா கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயின் மற்றும் வெள்ளி கொலுசுகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!
Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?