பசிக்கு காசு கேட்ட 6 வயது சிறுவன்.. கழுத்தை நெறித்து கொலை செய்த போலீஸ் கைது...! ம.பி.யில் பரபரப்பு

By Kevin KaarkiFirst Published May 12, 2022, 9:44 AM IST
Highlights

குற்றம் செய்த தலைமை கான்ஸ்டபில் ரவி ஷர்மாவை பணி நீக்கம் செய்யக் கோரி காவல் துறை தலைமையகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

போபாலில் சாப்பிட காசு கேட்ட ஆறு வயது சிறுவனை காவல் துறை தலைமை கான்ஸ்டபில் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் பகுதியில் உள்ள குவாலியர் போலீஸ் பயிற்சி பள்ளியில் தலைமை கான்ஸ்டபில் பதவியில் இருப்பவர் ரவி ஷர்மா. இவர் கடந்த வாரம் வியாழன் கிழமை ஆறு வயது சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

கான்ஸ்டபில் ஆத்திரம்:

“உயிரிழந்த சிறுவன் கான்ஸ்டபில் ரவி ஷர்மாவிடம் சாப்பாடு வாங்க காசு கேட்டுள்ளான், ஆனால் கான்ஸ்டபில் ரவி ஷர்மா பணம் தர மறுத்து விட்டார். எனினும், சிறுவன் தொடர்ந்து அவரிடம் காசு கேட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த ரவி ஷர்மா சிறுவனின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டார்,” என எஸ்.பி. அமன் சிங் ரத்தோர் தெரிவித்து இருக்கிறார். 

கைது செய்யப்பட்ட கான்ஸ்டபில் ரவி ஷர்மா, தான் ஏற்கனவே மன உளைச்சலால் இருந்ததாகவும் அப்போது சிறுவன் தொடர்ச்சியாக பணம் கேட்டே இருந்ததால் கோபம் அடைந்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார். தட்டியா எஸ்.பி. அமன் சிங் ரத்தோர் கொலை குற்றம் செய்த தலைமை கான்ஸ்டபில் ரவி ஷர்மாவை பணி நீக்கம் செய்யக் கோரி காவல் துறை தலைமையகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

உயிரிழந்த சிறுவன் முடி திருத்தம் தொழில் செய்பவரின் மகன் ஆவான். இவரது குடும்பத்தார் சிறுவன் காணவில்லை என மே 5 ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். 

உயிரிழப்பு:

“அதே நாள் காணாமல் போன சிறுவனின் உடல் குவாலியர் மாவட்டத்தின் ஜான்சி ரோட்டில் கண்டறியப்பட்டது. உள்ளூர் போலீஸ் அந்த பகுதிக்கு வந்ததும், காணாமல் போன சிறுவனின் புகைப்படத்தை வைத்து பார்த்து உயிரிழந்தது அந்த சிறுவன் தான் என முடிவு செய்தனர்,” என போலீசார் தெரிவித்தனர்.

சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் மரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவனின் உடல் கருப்பு நிற வெர்னா காரில் கொண்டு வந்து ஜான்சி ரோட்டில் வீசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கருப்பு நிற வெர்னா கார் தலைமை கான்ஸ்டபில் ரவி ஷர்மாவுக்கு சொந்தமானது ஆகும்.

click me!