பாகிஸ்தானில் பெண் கொடூர கொலை.. இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - பரபரப்பு சம்பவம்

Published : Dec 30, 2022, 05:20 PM IST
பாகிஸ்தானில் பெண் கொடூர கொலை.. இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை - பரபரப்பு சம்பவம்

சுருக்கம்

பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இந்து பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் உள்ள சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர் தயா பீல். இந்து மதத்தை சேர்ந்த 40 வயது பெண்ணான இவர் கடந்த 27ம் தேதி மாயமானார்.அவரது பிள்ளைகள் தேடிய போது தான் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள விளை நிலத்தில் தயா பீலின் உடல் மிக மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

தலை துண்டிக்கப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு  கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் மட்டுமல்ல இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த தயா பீல் குடும்பத்திற்கு அந்நாட்டின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனெட்டர் கிருஷ்ண குமாரி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படிங்க.. AIADMK : திமுக போல அதிமுக ஒன்றும் ராஜபரம்பரை கிடையாது.. வாரிசு அரசியலை அட்டாக் செய்த சி.வி சண்முகம்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 40 வயது விதவையான தயா பீல் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் மிக மோசமான நிலையில் இருந்தது. தலை துண்டிக்கப்பட்டு, காட்டுமிராண்டிகள் அதை முழுவதுமாக சிதைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க காவல் துறையினர் அந்த கிராமத்திற்குச் சென்றுள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி