கணவன் மீது ஏற்பட்ட அலுப்பு.? தனியா வீடு எடுத்து காதலன் உடன் என்ஜாய் செய்த மனைவி.. கழுத்தை அறுத்து கொலை.

Published : Sep 07, 2022, 04:23 PM IST
கணவன் மீது ஏற்பட்ட அலுப்பு.? தனியா வீடு எடுத்து காதலன் உடன் என்ஜாய் செய்த மனைவி.. கழுத்தை அறுத்து கொலை.

சுருக்கம்

திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கணவனை பிரிந்து மனைவி தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் இந்த கொலை அரங்கேறியுள்ளது.  

திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கணவனை பிரிந்து மனைவி தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் இந்த கொலை அரங்கேறியுள்ளது.

மனதைப் பார்த்து காதலிப்பவர்களை விட, அழகு, அந்தஸ்தை பார்த்து காதலிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்து வருகிறது, அதிலும் காம இச்சையை தீர்த்துக் கொள்ள காதலிப்பவர்களின் எண்ணிக்கையே இதில் அதிகம் என சொல்லலாம், காரணம் திருமண மான ஒரு சில ஆண்டுகளிலேயே காதல் தம்பதியர் பிரிந்து தவறான உறுவில் ஈடுபடுவதுதான் காரணம். 

இந்த வரிசையில் திருமண உறவில் நம்பிக்கை இழந்த மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் கணவனால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டம் பாக்காரபேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், அதே பகுதியைச் சேர்ந்த ரெட்டம்மா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள்  காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்: வீட்டுப் பாடம் செய்யாததால் ஸ்கேலால் அடித்த ஆசிரியர்.. கோமாவுக்கு போன 2 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.

ஆனால் அதையெல்லாம் மீறி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாந்த் ரெட்டம்மா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில ஆண்டுகள் வரை அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே கடந்தது, தற்போது அவர்களுக்கு ஏழு வயதில்  ஒரு மகன் இருக்கிறார், கடந்த சில ஆண்டுகளாக கணவர் ஸ்ரீகாந்த் மீது மனைவி ரெட்டம்மாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது, அதன்விளைவாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்நிலையில்தான் காதல் மனைவியின் ரெட்டம்மாவுக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் திருமணத்துக்கு புறம்பான உறவு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: சொந்தம் என நம்பி, வீட்டிற்குள் விட்ட பாவம்.. 16 வயது சிறுமியை வளைத்துப்போட்டு கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர்.

இதனால் கணவனுடன் சண்டையிட்டு ,பிரிந்து தனியாக வீடு எடுத்து ரெட்டம்மா வசித்து வந்தார். திருமலையில் உள்ள பல கடைகளில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில்தான் காதலன், ரெட்டம்மாவை அடிக்கடி சந்தித்து வருவதாக கணவன் ஸ்ரீகாந்துக்கு தகவல் கிடைத்தது, அடிக்கடி சொந்த ஊருக்கு கள்ளக்காதலன் வந்து செல்வது ஸ்ரீகாந்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவரையும் தீர்த்துக்கட்ட ஸ்ரீகாந்த் முடிவு செய்தார், வீட்டில் தனியாக இருந்த மனைவியின் ரெட்டம்மாவிடம் சென்று ஸ்ரீகாந்த் தகராறில் ஈடுபட்டார்.

அதில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை கரகர வென அறுத்து கொலை செய்தார், ரெட்டம்மா ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார், பின்னர் ஸ்ரீகாந்த் அங்கிருந்து தப்பி ஓடினார், ரெட்டம்மாவின் வீட்டிற்குள் தெருநாய்கள் சென்றுவருவதை கண்ட அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்,

அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார், அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து கணவன் ஸ்ரீகாந்தை தேடி வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!