மதுராந்தகத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் வேப்ப மரத்தில் ஆண் மற்றும் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் வேப்ப மரத்தில் ஆண் மற்றும் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் இருந்த அடையாள அட்டையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி (23), மற்றும் மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (35) என்பது தெரிந்தது. கடந்த 4-ம் தேதி இருவரும் மாயமாகி இருப்பதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், அருள்ஜோதியும், முத்து லட்சுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
தூக்குப்போட்டு தற்கொலை செய்த அருள்ஜோதியும், முத்துலட்சுமியும் உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அருள்ஜோதியும், முத்துலட்சுமியும் இந்த பகுதிக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.