விஏஓ கொலை செய்யப்பட்ட விவகாரம்... கைதான இருவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!!

By Narendran SFirst Published May 5, 2023, 9:10 PM IST
Highlights

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக லூர்தர் பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் செல்ல முயன்றது குறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.. நிலத்தகராறில் பழிக்கு பழி! ம.பியில் பயங்கரம் - வைரல் வீடியோ

இதனிடையே கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் லூர்தர் பிரான்சிஸ் பணிபுரிந்து கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த இரண்டு பேர் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் அப்போது என் மீது எப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த லூர்தர் பிரான்சிஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார். அத்துடன் புறநகர டி.எஸ்.பி. சுரேஷ், சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு கத்தி குத்து.. இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி.. நடந்தது என்ன?

இந்த நிலையில் விஏஓ கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே முக்கிய கொலையாளியான ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ், விஏஓ கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

click me!