ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு கத்தி குத்து.. இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி.. நடந்தது என்ன?

Published : May 05, 2023, 02:28 PM ISTUpdated : May 05, 2023, 02:40 PM IST
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு கத்தி குத்து.. இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி.. நடந்தது என்ன?

சுருக்கம்

கேரளா மாநிலம் மூணாறில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கேஎஸ்ஆர்டிசி ஸ்விப்ட் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்த சனில் என்பவர் மலப்புரத்திலும், சீதா அங்கமாலியிலும் ஏறியதாக கூறப்படுகிறது.

மூணாறில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றுக்கொண்டிருந்த கேஎஸ்ஆர்டிசி ஸ்விப்ட் பேருந்தில் பெண் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கேரளா மாநிலம் மூணாறில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கேஎஸ்ஆர்டிசி ஸ்விப்ட் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்த சனில் என்பவர் மலப்புரத்திலும், சீதா அங்கமாலியிலும் ஏறியதாக கூறப்படுகிறது. இரவு உணவுக்காக பேருந்து வழியில் நிறுத்திவிட்டு மீண்டும் கிளம்பியது. அப்போது, பேருந்தில் ஏறிய இருவருக்கும் முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சனில் கத்தியை எடுத்து சீதாவை சரமாரியாக குத்திவிட்டு, பயத்தில் அவரது கழுத்தை அவரே அறுத்துக்கொண்டார். 

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி! ஆத்திரத்தில் மகளிர் காவல் நிலையம் முன்பாக கணவர் செய்த காரியம்! தேனியில் பயங்கரம்

இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனை கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும்  முதலில் திருரங்கடியில் உள்ள எம்கேஎச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சனில் சீதாவும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். சனிலுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில் கூடலூரைச் சேர்ந்த சீதா ஆலுவாவில் ஹோம் நர்சாக பணியாற்றி வருவதும், சனில் கோட்டயத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க;-  கண்ட இடத்தில் கை வைத்து டீச்சர் செய்த டார்ச்சர்.. மாணவன் என்ன செய்தான் தெரியுமா?

இதனிடையே, சீதாவின் சகோதரர் ஏசியாநெட் நியூக்கு அளித்த தகவலில்;-  சனில் கடந்த 2 வருடங்களாக சீதாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், புகைப்படங்களை காட்டி மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், மூணாறில் இருந்து பேருந்தில் ஏறிய போது குடும்பத்தாரிடம் சீதா தகவலை சொல்லிட்டு ஏறியதாக கூறினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!