கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி! ஆத்திரத்தில் மகளிர் காவல் நிலையம் முன்பாக கணவர் செய்த காரியம்! தேனியில் பயங்கரம்

Published : May 05, 2023, 12:05 PM IST
கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி! ஆத்திரத்தில் மகளிர் காவல் நிலையம் முன்பாக கணவர் செய்த காரியம்! தேனியில் பயங்கரம்

சுருக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்தவர் தீபாவளி. கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியுடன் விவகாரத்து பெற்ற நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். 

ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையம் முன்பாக மனைவி மற்றும் கள்ளக்காதலனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்தவர் தீபாவளி. கூலித்தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியுடன் விவகாரத்து பெற்ற நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். 

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும், சங்கீதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த கணவர் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பழகி வந்தனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவும், ஈஸ்வரனும் ஜோடியாக ஊரைவிட்டு ஓடி மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இந்த பிரச்னை குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு செல்லும்படி கள்ளக்காதல் ஜோடி மற்றும் தீபாவளிக்கு போலீசார் அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி நேற்று விசாரணைக்காக சங்கீதாவும், ஈஸ்வரனும் பேருந்தில் இறங்கி ஆண்டிபட்டி மகளிர் காவல் நிலையத்தில் வந்து கொண்டிருந்தனர்.

இருவரும்  வந்ததைக் கண்டவுடன் ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரனையும், சங்கீதாவையும் சரமாரியாக குத்தினார். கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இருவரும் அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் வாசலில் தஞ்சமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த சங்கீதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக  தீபாவளியை போலீசார் கைது செய்துள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!