Watch : தற்கொலை செய்த கர்ப்பிணியின் உடலை வீட்டு வாசலில் புதைத்த 50 பேர் மீது வழக்கு பதிவு!

By Dinesh TG  |  First Published May 5, 2023, 4:37 PM IST

அன்னவாசல் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணிப் பெண்ணின் உடலை, வீட்டு வாசலில் புதைத்த 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 


புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே விழா பட்டி மேட்டுகளம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 26) இவருக்கும் குளத்தூர் அருகே உள்ள மேல சவேரியார் பட்டி சேர்ந்த குமரன் மகள் நாகேஸ்வரி (வயது 22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

நாகேஸ்வரிக்கும் அவரது கணவர் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மன வேதனை அடைந்த நாகேஸ்வரி கணவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அன்னவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, தங்கமணி, விஜயராணி, அரவிந்த் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.. நிலத்தகராறில் பழிக்கு பழி! ம.பியில் பயங்கரம் - வைரல் வீடியோ

இந்நிலையில், விஜயராணியின் சகோதரர் பால்ராஜ் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், அரவிந்த் வீட்டு முன்பு கர்ப்பிணிப் பெண்ணின் உடலை புதைத்த மேல சவேதி ஏற்பட்டு பகுதியைச் சேர்ந்த சண்முகம், அப்பாவு, சைவராசு, வெங்கடேஷ், ராஜா, மணி, வீரய்யா, பாலகிருஷ்ணன் துரைராஜ், கண்ணன், பழனிச்சாமி உள்ளிட்ட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

click me!