கருமம்.. கருமம்.. ஆசனவாயில் 40 லட்சம் மதிப்புள்ள தங்கம்.. உள்ளாடையை கழட்டி பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி

By Ezhilarasan Babu  |  First Published Oct 20, 2022, 7:44 PM IST

தாய்லாந்து நாட்டில் இருந்து ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 39 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 894 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 


தாய்லாந்து நாட்டில் இருந்து ஆசனவாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 39 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 894 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பலர் வெளிநாடுகளில் இருந்து அனுமதிக்கப்படாத பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வந்து சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைதாகும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சட்டவிரோதமாக பொருட்களை பலர் பல்வேறு வகைகளில் மறைத்து  கடத்தியும் வருகின்றனர். அதற்கு அவர்கள் பல புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்துகின்றனர். இந்த வரிசையில் ஒரு இளைஞர் ஆசன வாயில் வைத்து தங்கத்தை கடத்தி வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்:   மது போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு பின்னல் அமர்ந்து செல்பவர்களுக்கும் அபராதம்: போக்குவர்த்து போலீஸ் எச்சரிக்கை

undefined

முழுவிவரம் பின்வருமாறு:- சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு கடத்தல் பொருள் கொண்டு வரப்படுவதாக விமானநிலைய சுங்க துறை முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து விமான பயணிகளை கண்காணிக்க சுங்கத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்தவர்களை அதிகாரிகள் கண்காணித்தனர். அங்கு வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையும் படியுங்கள்:  என் சம்பளம் அதிகமாயிடுச்சி, வரதட்சணையும் அதிகமா வாங்கிட்டு வா.! சாப்ட்வேர் என்ஜினியர் மனைவிக்கு டார்ச்சர்

சந்தேகம் அடைந்த அதிகாரிகள் உடனே அவரை மெட்டர் டிடக்டரை வைத்து சோதனை செய்ததில் எதுவும் இல்லை எனவந்தது. பின்னர் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரின் உள்ளாடை மற்றும் ஆசனவாய் பகுதியை சோதனை செய்தனர். அப்போது ஆசனவாயிலில் தங்கத்தை மறைத்து  வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து 39 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 894 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

click me!