வீட்டிற்க்குள் நுழைந்து திருமணமான இளம் பெண்ணை கதற கதற கற்பழித்த 60 வயது முதியவர்.. 17 ஆண்டு சிறை.

By Ezhilarasan BabuFirst Published Oct 20, 2022, 7:15 PM IST
Highlights

குடிபோதையில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து திருமணமான பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 60 வயது முதியவருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015 ஆண்டு நடந்த குற்றத்திற்கு இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 

குடிபோதையில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து திருமணமான பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 60 வயது முதியவருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015 ஆண்டு நடந்த குற்றத்திற்கு இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதை தடுக்க அரசும் காவல்துறை நடத்திய நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.  இந்த வரிசையில்  திருமணமான பெண்ணை 60 வயது முதியவர் பாலியல் வன்புணர்வு செய்த கொடுமை நடந்துள்ளது. தற்போது அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: ஆட்டுகறி சமைப்பதில் கணவன் மனைவி இடையே சண்டை .. தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் அடித்து கொலை.

சென்னை அண்ணாநகர் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அமைந்தகரை சார்ந்த 60 வயதான முருகானந்தம் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு  அந்தப் பெண் தனியாக இருந்த நிலையில், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண்ணை கதற கதற பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தபெண் புகார் கொடுத்தார். அந்த புகாரை பெற்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் கைது செய்தனர்.

இதையும் படியுங்கள்:  மது போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு பின்னல் அமர்ந்து செல்பவர்களுக்கும் அபராதம்: போக்குவர்த்து போலீஸ் எச்சரிக்கை

பின்னர் அதிலிருந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார். ஆனால் அதற்கான விசாரணை எழும்பூரில்  உள்ள அல்லிக்குளம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி  டி.எச் முகமது பாருக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்த்தி பாஸ்கரன் ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் நீதிபதி பருக் தீர்ப்பு வழங்கினார். அதில்,  வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். 

 

click me!