ஆட்டுகறி சமைப்பதில் கணவன் மனைவி இடையே சண்டை .. தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் அடித்து கொலை.

Published : Oct 20, 2022, 03:38 PM IST
ஆட்டுகறி சமைப்பதில் கணவன் மனைவி இடையே சண்டை .. தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் அடித்து கொலை.

சுருக்கம்

ஆட்டு இறைச்சியை சமைப்பதில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அவர்களை சமாதானப்படுத்த வந்த பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

ஆட்டு இறைச்சியை சமைப்பதில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அவர்களை சமாதானப்படுத்த வந்த பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த கொடூரம் நடந்துள்ளது. செவ்வாய்க்கிழமையில்  ஆட்டு இறைச்சி  சமைக்க வற்புறுத்தியதாலேயே கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  என் சம்பளம் அதிகமாயிடுச்சி, வரதட்சணையும் அதிகமா வாங்கிட்டு வா.! சாப்ட்வேர் என்ஜினியர் மனைவிக்கு டார்ச்சர்

பெரும்பாலன இந்துக்கள் வீட்டில் செவ்வாய்க் கிழமையை நல்ல நாளாக கருதி  அன்று அசைவ உணவுகளை தவிர்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது.  இந்நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை ஆட்டு இறைச்சி சமைப்பதில் கணவன் மனைவிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் சேர்ந்தவர் பப்பு ஏர்வார், இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு ஆட்டு இறைச்சி வாங்கி வந்தார். ஆனால் அதை அவரது மனைவி சமைக்க மறுத்ததுடன் செவ்வாய்க்கிழமை நல்ல நாள், இன்று ஆட்டிறைச்சி சமைத்தால் குடும்பத்திற்கு ஆகாது என கணவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இதையும் படியுங்கள்:  ஒரே நேரத்தில் இரண்டு சகோதரர்களை கரெக்ட் செய்த இளம்பெண்.. எதிர்த்த தந்தை.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

இதில் ஒரு கட்டத்தில் பப்புவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கைலப்பாக மாறியது. சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் பில்லு என்பவர் அவர்களை சமாதானம் ஓடி வந்தார். அதேபோல் அவர்களை சமாதானம் செய்து வைத்தார். ஒருவழியாக அவர்களுக்கு இடையே சண்டை ஓய்ந்தது. இதனையடுத்து பில்லு வீடு திரும்பினார். சிறிது நேரம் கழித்து பில்லுவில் வீட்டுக்கு பின் தொடர்ந்து சென்ற பப்பு, பில்லுவை சரமாரியாக தாக்கி கொலை செய்தார். அதில் சம்பவ இடத்திலேயே பில்லு சரிந்து  உயிரிழந்தார். இதை அடுத்து பில்லுவின் மனைவி பப்பு மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பப்புவை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி