குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என வந்துள்ள புதிய போக்குவரத்து விதியை சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்திவருகின்றனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என வந்துள்ள புதிய போக்குவரத்து விதியை சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்திவருகின்றனர்.
நாட்டிலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 11 ஆயிரத்து 419 பேர் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக தேசிய ஆவண காப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 1206 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளை குறைப்பதற்காக போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: என் சம்பளம் அதிகமாயிடுச்சி, வரதட்சணையும் அதிகமா வாங்கிட்டு வா.! சாப்ட்வேர் என்ஜினியர் மனைவிக்கு டார்ச்சர்
undefined
கடந்த இரண்டாயிரத்து 19 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி 10,000 அபராதம் விதிக்கப்பட்டு அவை நீதிமன்றத்தின் மூலமாக பெறப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 1,178 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனத்தை இயக்குவதாலேயே அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கிறது, எனவே அதைத் தடுக்க பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே குடித்து விட்டு வாகனம் ஓட்டும் நபர்களிடம் மட்டுமே போக்குவரத்து போலீசார் வழக்கமாக அபராதத் தொகை வசித்து வந்தனர்.
இதையும் படியுங்கள்: ஒரே நேரத்தில் இரண்டு சகோதரர்களை கரெக்ட் செய்த இளம்பெண்.. எதிர்த்த தந்தை.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
ஆனால் தற்போது வாகன ஓட்டுனர்கள் குடிபோதையில் இருந்து அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களுடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
கார் மற்றும் ஆட்டோ சவாரியில் இதே போன்ற நடைமுறை கடைபிடிக்கப்படும் என்றும், ஒருவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் என்று தெரிந்திருந்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற நோக்கில் இந்த சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இச்சட்டத்தை நேற்று நள்ளிரவு முதல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.