
சென்னையில் பிரபல ரவுடி 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொண்டித்தோப்பு வுட் வார்ப்பு பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்த சதீஷ் (எ) குண்டு சதீஷ் (22), பிரபல ரவுடி என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க;- மிஸ்டு காலில் உருவான கள்ளக்காதல்! புருஷன், பசங்களை உதறி தள்ளிவிட்டு சென்ற பெண்ணின் நிலைமையை பார்த்தீங்களா.?
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ரவுடியும் கஞ்சா வியாபாரியுமான இட்டா அஜித் தலைமையில் 10 பேர் கும்பல் சதீஷை வெட்டி கொலை செய்து விட்டு கால்வாய் ஓரம் வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட சதீஷ் போலீஸ் இன்பார்மராக செயல்படுகிறார் என நினைத்து அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சதீஷ் மீது பல்வேறு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர்! ச்சீ அசிங்கமா இல்லையா?