சிகிச்சைக்கு பதிலாக கூட்டு பாலியல் வன்கொடுமை - உபி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ..

Published : Aug 26, 2019, 01:20 PM ISTUpdated : Aug 26, 2019, 01:22 PM IST
சிகிச்சைக்கு பதிலாக கூட்டு பாலியல் வன்கொடுமை  - உபி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ..

சுருக்கம்

உத்திரபிரதேசத்தில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு அங்கிருக்கும் ஊழியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .  

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸாவை சேர்ந்தவர் 17 வயதான இளம்பெண்  ரேகா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) . இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அங்கிருக்கும் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . அவருக்கு துணையாக அவரின் தாயார் இருந்து கவனித்து வந்திருக்கிறார் .

சம்பவத்தன்று இரவு ரேகாவின் தாயார் தூங்கி விட்டார் . இரவு 10 மணியளவில் வந்த வார்டு பாய் சிவானந்தன் ஊசி போட வேண்டும் என்று கூறி ரேகாவை கீழே இருக்கும் அறைக்கு அழைத்துள்ளார் . அம்மாவை எழுப்பி கூட்டி வருகிறேன் என்று கூறிய ரேகாவிடம் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார் சிவானந்தன் .

இதையடுத்து கீழே சென்ற ரேகாவிற்கு மாத்திரை ஒன்றை கொடுத்து இருக்கிறார் வார்டு பாய் சிவானந்தன் . அதை சாப்பிட்டதும் ரேகா மயக்கமடைந்திருக்கிறார் . இதன்பிறகு சிவனந்தனும் மருத்துவமனையில் வேலை பார்க்கும் விஷால் என்பவரும் சேர்ந்து ரேகாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் .

மயக்கம் தெளிந்த ரேகா தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி அழுதிருக்கிறார் . உடனே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது காவல் துறையிடம் புகார் அளித்தார் ரேகாவின் தாயார் . புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை மருத்துவமனை ஊழியர்கள் இரண்டுபேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் . இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது .

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

PREV
click me!

Recommended Stories

ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?