குறைவாக வந்த மொய்ப் பணம் .. விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் ..

Published : Aug 26, 2019, 11:36 AM ISTUpdated : Aug 26, 2019, 11:39 AM IST
குறைவாக வந்த மொய்ப் பணம் .. விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் ..

சுருக்கம்

மதுரை அருகே மொய் விருந்து நடத்தியதில் மொய்ப்  பணம் குறைவாக வந்ததால் விரக்தி அடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் நாகம்மாள் . இவரது கணவர் பல வருடங்களுக்கு முன்னரே இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் நாகம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார் . இவர் வட்டிக்கு விடும் தொழில் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது .

மதுரையின் சுற்றுவட்டார பகுதிகளில் மொய் விருந்து நடத்துவது வாடிக்கை . நாகம்மாள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மொய் விருந்து நடத்தி அதில் வரும் பணத்தை வைத்து வட்டிக்கு விடும் தொழில் பார்த்து வந்திருக்கிறார் . அதன்படியே இந்த வருடத்திற்கான மொய் விருந்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நடத்தி இருக்கிறார் .

மொய் விருந்தில் அவர் எதிர்பார்த்த தொகை வரவில்லை என்று கூறப்படுகிறது . அதாவது நாகம்மாள் சுமார் 40 லட்சம் மொய் விருந்தின் மூலம் வரும் என்று நினைத்ததாகவும் ஆனால் 12 லட்சம் நெருக்கத்தில் தான் மொய்ப் பணம் வந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்  . இதனால்  நாகம்மாளின் வட்டிக்கு விடும் தொழில் சரிவர செல்லவில்லை .

இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட  நாகம்மாள் , நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் .  வெகுநேரமாக நாகம்மாளின் வீடு திறக்கப்படாமலிருப்பதை கண்டு சந்தேகம் கொண்ட  அக்கம்பக்கத்தினர் , ஜன்னல் வழியாக பார்த்த போதுதான் நாகம்மாள் தூக்கிட்டது தெரிய வந்தது .

உடனே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள் . சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் , நாகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதனிடையே நாகம்மாளின் தற்கொலைக்கு மொய்ப் பணம் குறைவாக வந்தது தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என்றும் விசாரணை செய்து வருகின்றனர் .

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு