கியாஸ் சிலிண்டர் வெடித்து திமுக நிர்வாகி பலி !! மனைவி , மகளும் பரிதாப சாவு !!

Published : Dec 29, 2018, 02:25 PM IST
கியாஸ் சிலிண்டர் வெடித்து திமுக நிர்வாகி பலி !! மனைவி , மகளும் பரிதாப சாவு !!

சுருக்கம்

கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்  

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே, கொடைக்கானல் கீழ்மலை பகுதியில்  மங்களம்கொம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் . . தி.மு.க. பிரமுகரான இவர்  ஊராட்சி மன்ற  முன்னாள் தலைவராகவும் இருந்தது வந்தார்.

 இவரது வீட்டில் இன்று அதிகாலையில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து. இந்த விபத்தில், அவரும் அவரது மனைவி மஞ்சுளா மகள் விஷ்ணுப்ரியாஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

கணேசன் தனது மகளின் படிப்புக்காக சின்னாளபட்டியில் குடியிருந்து வந்த நிலையில், அரையாண்டு விடுமுறைக்காக  மங்களம்கொம்பு வந்துள்ளனர். இரவு கேஸ் சிலிண்டரை சரியாக மூடிவைக்காததால் கியாஸ் கசிந்ததாகவும், அதை உணராமல் அதிகாலையில் தேநீர் போடுவதற்காக அடுப்பை பற்றவைத்தபோது வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் உயிரிழந்த கணேசன், கமனூர் ஊராட்சி தலைவராக இருந்தபோது, சிறந்த ஊராட்சிமன்ற தலைவருக்கான தேசிய விருதுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்கூல் டைம்ல தனியா கூட்டிட்டு போய் பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. ஜெயிலில் ஆசிரியர் திடீர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
நான்தான் உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆசைவார்த்தை கூறி பலான போட்டோவை வாங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி!