உல்லாசத்துக்கு இடையூறு !! தறி ஓட்டும் தொழிலாளியின் கழுத்தை அறுத்து வீசிய மனைவியின் கள்ளக் காதலன் !!

Published : Dec 29, 2018, 09:00 AM IST
உல்லாசத்துக்கு இடையூறு !! தறி ஓட்டும் தொழிலாளியின் கழுத்தை அறுத்து வீசிய மனைவியின் கள்ளக் காதலன் !!

சுருக்கம்

கிருஷ்ணகிரி அருகே  கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் தறி ஓட்டும் தொழிலாளியை  மனைவியின் காதலன் கழுத்தை அறுத்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ் . தறி ஓட்டும் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி அம்பிகா .  இவர்களுக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அம்பிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கும்  கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாதேஸ் அம்பிகாவை கண்டித்ததார். இதையடுத்து தனது கள்ளக் காதலுக்கு மாதேஸ் இடையூராக இருப்பதால் ஆத்திரமடைந்த அவர்  மாதேசை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ராமமூர்த்தியின்  மாடு மாதேசின் நிலத்தில் மேய்ந்தது. அப்போது அங்கு வந்த மாதேஸ் அந்த  மாட்டை விரட்டியுள்ளார். இதையடுத்து அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராமமூர்த்தியின் நண்பர் முரளியும் உடனிருந்துள்ளார்.


ஏற்கனவே அம்பிகாவின் மீது இருந்த மோகத்தில் அவரை கொலை செய்ய வேண்டும் என்று ஆத்திரத்தில் இருந்த ராமமூர்த்தி கீழே கிடந்த கத்தியை எடுத்து மாதேசை துரத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி விட்டார். இதில் முரளியும் சம்பந்தப்பட்டுள்ளார்.

இந்த கொலையில் அம்பிகாவுக்கும் தொடர்பு உள்ளதாக மாதேசின் தம்பி கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் அம்பிகாவையும் போலீசார் கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு