ஓடும் பேருந்தில் வாலிபரை வெட்டிய கும்பல்… கோவையில் அரங்கேறிய பயங்கரம்!!

Published : May 07, 2023, 04:37 PM ISTUpdated : May 07, 2023, 04:56 PM IST
ஓடும் பேருந்தில் வாலிபரை வெட்டிய கும்பல்… கோவையில் அரங்கேறிய பயங்கரம்!!

சுருக்கம்

கோவையில் ஓடும் பேருந்தில் வாலிபரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையில் ஓடும் பேருந்தில் வாலிபரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை செவுரிபாளைத்தைச் சேர்ந்தவர் கமலேஷ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலியகுளம் கோவில் திருவிழாவில் நடந்த தகராறு சந்தோஷ் என்பவரை குத்தியதாக தாக்கியதாக தெரிகிறது. இதில் சந்தோஷ்குமார் காயமடைந்தார். இது குறித்து இராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே தன்னை கத்தியால் குத்திய கமலேசை பழிவாங்க சந்தோஷ் திட்டமிட்டார்.

இதையும் படிங்க: ச்சீ.! சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து கேவலமான காரியம் செய்த 81 வயது கிழவன்

இதை அடுத்து சிங்காநல்லூரில் இருந்து தீத்திபாளையம் நோக்கி சென்ற எஸ் 3 அரசு பேருந்தில் கமலேஷ் சென்று கொண்டு இருந்தை அறிந்த சந்தோஷ் உட்பட நான்கு பேர் இரண்டு இரு சக்கர வாகனங்களில் அந்த பேருந்தை பின் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது பேருந்து உள்ளே சென்று 4 பேரும் சேர்ந்து கமலேஷை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. இதனால் அலறி துடித்தபடி அவர் தப்பி ஓட முயன்றார். மேலும் பேருந்தில் இருந்த பயணிகளும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சில பயணிகள் துணிச்சலுடன் அரிவாளால் வெட்டிய கும்பலை மடக்கிப் பிடிக்கும் முயன்றனர். மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி! காணாமல் போன கல்லூரி மாணவி முகம், அந்தரங்க உறுப்புகளில் காயங்களுடன் சடலமாக மீட்பு?

சந்தோஷ் குமார் என்பவர் மட்டும் பயணிகளிடம் பிடிபட்டார். அவரை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் இடம் பயணிகள் ஒப்படைத்தனர். காயமடைந்த கமலேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு கோகுல் என்ற ரவுடி பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் ஓடும் பேருந்தில் பயணிகள் முன்னிலையில் வாலிபர் வெட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி