’அடிக்கடி நிர்வாணமாக வீடியோ கால் , நண்பனின் முன்னாள் காதலிக்கு பாலியல் தொல்லை, அதிரவைக்கும் சம்பவங்கள்.

Published : Jun 03, 2022, 06:09 PM ISTUpdated : Jun 03, 2022, 06:18 PM IST
’அடிக்கடி நிர்வாணமாக வீடியோ கால் , நண்பனின் முன்னாள் காதலிக்கு பாலியல் தொல்லை, அதிரவைக்கும் சம்பவங்கள்.

சுருக்கம்

நண்பனின் காதலியில் அந்தரங்க புகைப்படங்களை வைத்து அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வந்த இளைஞன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  ஐதராபாத்தில் நடந்துள்ளது.  

நண்பனின் காதலியில் அந்தரங்க புகைப்படங்களை வைத்து அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வந்த இளைஞன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  ஐதராபாத்தில் நடந்துள்ளது. இதேபோல் இளம் பெண்ணிடம் அடிக்கடி வீடியோ காலில் பேசி அந்த பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து இளைஞன் கொடுமைப் படுத்தி வந்த சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

பெண்களுடன் நெருங்கிப் பழகும் இளைஞர்கள் அவர்களின் அந்தரங்க புகைப்படம், விஷயங்களை வைத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சம்பவங்கள் பரவலாக அரங்கேறி வருகிறது. அவர்களுக்கு பயந்து அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு அப்பெண்கள் தள்ளப்படுகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. சமூக வலைத்தளத்தில் ஒரு பெண்ணுக்கு காதல் குறுஞ்செய்திகள் வந்தது தன்னை கைவிட்டுச் சென்ற முன்னாள் காதலன் தான் இப்படி செய்கிறான் என எண்ணிய அந்த பெண் அந்த குறுஞ்செய்திகளுக்கு பதில் அளித்தார், ஒருகட்டத்தில் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி எதிர் முனையில் இருந்து கோரப்பட்டது, முன்னாள் காதலன் தானே என எண்ணிய அந்த பெண்ணும் தனது அரை நிர்வாணப் படங்கள், வீடியோக்களை அனுப்பினார். ஆனால புகைப்படங்களை  பெற்றுக்கொண்டு அந்தப் பெண்ணை மிரட்டி வந்தார், பின்னர் அது குறித்து விசாரித்ததில் அந்த இளைஞன் தனது முன்னாள் காதலனின் நண்பன் என அந்தப் பெண்ணுக்கு தெரியவந்தது.


விவரம்:-  புறநகர் ஹைதராபாத் சிவரம்பள்ளியைச் சேர்ந்த பெண் ஒரு ராஜூ என்ற இளைஞனை காதலித்து வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக இளைஞனுக்கும் அந்தப் பெண்ணும் பிரிந்தனர். இந்நிலையில் காதலன் ராஜீவின் நண்பன் மொஹ்சின் (22)  பெயிண்டர் வேலை செய்து வருகிறார், தனது நண்பனின் காதலியும் நண்பனும் பிரிந்துவிட்டனர் என்பதை அறிந்து கொண்டு தனது சித்து விளையாட்டை ஆரம்பித்தார். எப்படியே நண்பனின் முன்னால் காதலியில் தொலைபேசி  என்னை சேகரித்த மொஹ்சின், இந்த பெண்ணுடன் சாட்டிங்க செய்ய தொடங்கினான், தனது முன்னாள் காதலன் தான் பேசுவதாக நம்பிய அந்த பெண்ணும் பல மணி நேரம் ஆன்லைன் சாட்டிங் செய்தார், அந்தப் பெண்ணை முழுமையாக நம்ப வைத்து இளைஞன், அந்தப் பெண்ணிடம் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டான். முன்னாள் காதலன் தான் கேட்கிறான் என எண்ணிய அந்த பெண்ணும் நிர்வாண புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தார். அதை வைத்துக் கொண்டு  மெஹ்சின் அந்த பெண்ணை மிரட்ட தொடங்கினார். 

பின்னரே தன்னிடம் புகைப்படங்கள் வீடியோக்கள் பெற்றது தனது முன்னாள் காதலர் இல்லை அது அவரது நண்பர் என்பது அந்த பெண்ணுக்கு தெரிந்தது. பின்னர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு அந்தப் பெண்ணை மெஹ்சின்  மிரட்டி வந்தார், அந்தப் பெண் எவ்வளவு கெஞ்சியும் மெஹ்சின் கேட்கவில்லை, இதனால் அந்த பெண் மெஹ்சின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

நிர்வாண வீடியோ கால்:-

சமீபத்தில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. விசாகப்பட்டினம் யமஞ்சிலி மண்டலம் பூலபர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் பார்கவ்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வருகிறார், சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் எனில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.  அந்த பெண்ணிடமிருந்து பதில் வந்தது, மகிழ்ச்சி அடைந்த பார்கவ்வும் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் உரையாட ஆரம்பித்தார், அந்த பெண்ணுடன் நட்பாக பழகி இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி வந்தனர், இருவரும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோ காலில் பேசினர். அப்போது பார்கவ் அந்த பெண்ணை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாகக் கூறினார். அதற்கு சம்மதித்து அந்த பெண்ணும்  அடிக்கடி நிர்வாணமாக பார்கவ்க்கு காட்சி அளித்ததாக தெரிகிறது. பின்னர் அதை வீடியோவாக பதிவு செய்து கொண்ட பார்க்கவும் அதை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி மிரட்டி வந்தார். இதனையடுத்து அந்த பெண் புகார் கொடுத்ததையடுத்த இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!