நடுரோட்டில் கேக் வெட்டி, கட்டிப் பிடித்து முதல் மனைவிக்கு முத்தம்.. நடு வீட்டில் தூக்கில் தொங்கிய 2வது மனைவி..

Published : Jun 03, 2022, 03:38 PM IST
நடுரோட்டில் கேக் வெட்டி, கட்டிப் பிடித்து முதல் மனைவிக்கு முத்தம்.. நடு வீட்டில் தூக்கில் தொங்கிய 2வது மனைவி..

சுருக்கம்

இரண்டாவது மனைவி எதிரில் முதல் மனைவியை கட்டிப்பிடித்து கணவன் முத்தம் கொடுத்ததால் மனமுடைந்த இரண்டாவது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இச்சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நடந்துள்ளது. 

இரண்டாவது மனைவி எதிரில் முதல் மனைவியை கட்டிப்பிடித்து கணவன் முத்தம் கொடுத்ததால் மனமுடைந்த இரண்டாவது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இச்சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மண்டலவாடியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (28) ராணுவ வீரராக ஐம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா (25) கடந்த 2019 ஆம் ஆண்டு விடுமுறையில் ஊருக்கு வந்த பிரபாகர் அதே பகுதியைச் சேர்ந்த  18 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர்  சரிகாவை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பிரபாகரன் பின்னர் இரண்டாவது மனைவியை மிரட்டி வீட்டிற்கு அழைத்து வந்தார்.

அப்போது தான் ஏற்கனவே பிரபாகரனுக்கு திருமணம் ஆனது சரிகாவுக்கு தெரியவந்தது. இதனால் மனம் உடைந்த சரிகா அவரது பெற்றோர் வீட்டிற்கே திரும்பிச் சென்றுவிட்டார். எனவே கடந்த 29ஆம் தேதி பிரபாகரனுக்கு பிறந்தநாள், அதற்கு வரவேண்டுமென இரண்டாவது மனைவிக்கு பிரபாகர் அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் வரவில்லை, இதனால் தனது முதல் மனைவியுடன் சரிகாவின் வீட்டுக்குச் சென்ற பிரபாகர்,  சரிகாவின் வீட்டு வாசலில் வைத்து கேக் வெட்டி அதை தனது முதல் மனைவிக்கு ஊட்டி விட்டார். பின்னர் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார், பின்னர் சரிதா எதிரிலேயே அவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதை நேரில் பார்த்த சரிகாவுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டது,  உச்சகட்ட விரக்தியடைந்தார் சரிகா, இந்நிலையில் தனது வீட்டில் அனைவரும் இரவு தூங்கிய பின்னர் கடிதம் எழுதி வைத்து விட்டு நடு வீட்டில்  தூக்கில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர்கள் மகள்  தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், மகளின் உடலை கண்டு கதறி அழுதனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், பின்னர் சரிகாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!