திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் நெஞ்சுவலி மற்றும் வலிப்பு ஏற்பட்டு கடந்த 22ம் தேதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மஸ்தான் கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தி படுத்திய காவல் துறையினர் அதிரடியாக அவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர் டாக்டர் மஸ்தான். 1995 முதல் 2001 வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இதனைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த அவருக்கு கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவில் பொறுப்பு வழங்கப்பட்டது.
சபரிமலை; மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. குடும்பத்துடன் சேப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தாா். இந்நிலையில் கடந்த 22ம் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார்.
கூடுவாஞ்சேரி அருகே வந்தபோது அவருக்கு நெஞ்சுவலி மற்றும் வலிப்பு ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மஸ்தான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
புதுக்கோட்டையில் சர்ச்சைக்குள்ளான கோவிலில் சமத்துவ பொங்கல்; ஆட்சியருக்கு குவியும் பாராட்டு
இருப்பினும் மஸ்தானின் மரணத்தில் சந்தேகம் இருப்பதை அறிந்த காவல் துறையினர், இதனை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக அவரது கார் ஓட்டுநர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இமரான் என்பவருக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்தால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறப்படுகிறது. கொலையில் தொடர்புடைய இம்ரான், சுல்தான், நசீர் தவ்பீக், லோகேஷ் ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.