உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
திருமணமாகி 6 ஆண்டுகளாக குழந்தை இல்லையென்ற ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிச் சேதப்படுத்திய அவரது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி கோபித்துக் கொண்டு மனைவி தாய் வீட்டிற்கு செல்வதும் அவரை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அழைத்து வருவதும் தொடர்கதையாக இருந்து வந்தது.
இதையும் படிங்க;- கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியே 50 முறை ரேப் செஞ்சு என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டான்! காக்கியால் கதறிய பெண்
இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் குழந்தை தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ரவீந்திரன் தனது மனைவியை கடுமையான தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு அவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். கடந்த 8 மாதங்களாக அவரது தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து, மீண்டும் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு ரவீந்திரன் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி மனைவியுடன் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ள ரவீந்திரன் முயன்றுள்ளார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கணவர் பிளேடால் தாக்கி, அந்தரங்க உறுப்புகளில் காயத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது வலியால் துடித்து கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவீந்திரன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க;- கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. சினிமா பாணியில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை தூக்கிய எஸ்.ஐ. மனைவி..!