மிளகாய் பொடி தூவி இளைஞர் கொடூர கொலை.. ஆத்திரம் தீராததால் தலையை துண்டித்த பயங்கரம்..!

Published : Dec 29, 2022, 11:04 AM IST
மிளகாய் பொடி தூவி இளைஞர் கொடூர கொலை.. ஆத்திரம் தீராததால் தலையை துண்டித்த பயங்கரம்..!

சுருக்கம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்றுக்கொண்டிருந்த போது கண்களில் மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்டார். 

மிளகாய் பொடி தூவி இளைஞர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்றுக்கொண்டிருந்த போது கண்களில் மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, ஆத்திரம் தீராததால் அந்த மர்ம கும்பல் இளைஞரின் தலையை துண்டித்து தனியாக எடுத்து சென்றது. 


 
இந்நிலையில், அப்பகுதியாக சென்ற பொதுமக்கள் தலையில்லாமல் இளைஞரின் உடல் இருப்பதையும், அதன் அருகில் இருசக்கர வாகனம் ஒன்று சாலையோரமாக விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலையை தேடி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மிளகாய் பொடி தூவி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி