கோவை காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் தகரம் மற்றும் தென்னங்கீற்றால் கூரை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கூரையில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பெண் ஒருவரின் உடல் தீயில் கருகிய நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காட்டூர் பகுதி காவல் துறையினர் உயிரிழந்தவர் யார்? எவ்வாறு உயிரிழந்தார்? கொலையா? விபத்தா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையில் திருநங்கை மீது கொலைவெறி தாக்குதல் 1 மணி நேரத்தில் போதை ஆசாமி கைது
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.