மகள் தாலி அறுத்தாலும் பரவாயில்லை! மருமகனை ஆணவக்கொலை செய்ய கூலிப்படை ஏவிய மாமனார்! 3 பேர் மீது குண்டாஸ்!

By vinoth kumarFirst Published Jul 5, 2024, 10:34 AM IST
Highlights

சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

செங்கம் அருகே மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞரை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சித்த தந்தை உள்பட மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்  பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் செங்கம் பெங்களூரு ரோட்டில் இயங்கி வரும் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

Latest Videos

இதையும் படிங்க: என் பொண்ணையே லவ் பண்ணி கல்யாணம் பண்றியா! மருமகனை ஆணவக்கொலை செய்ய கூலிப்படை ஏவிய மாமனார்!

இதனையடுத்து வேறு வழியியல்லாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு தனி குடித்தனம் நடத்தி வந்தனர். காதல் திருமணத்தை ஏற்காத பெண்ணின் தந்தை திருமணமாகி ஐந்து மாதங்களுக்கு பிறகு  கூலிப்படையை அனுப்பி தனது மகளின் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் பெட்ரோல் பங்கில் இரவு பணியில்  இருந்த விஜியை கூலிப்படையினர் கொடுவாவால் சராமாரியாக வெட்டினர். இதனை தடுக்க வந்த அரவிந்த சாமி என்ற நபரையும் வெட்டி விட்டு கூலிப்படை தப்பித்தனர். படுகாயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்ட செங்கம் போலீசார் விஜியை கொலை செய்ய முயற்சி செய்ததாக பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: Salem AIADMK Leader Murder Case: சேலத்தில் இபிஎஸ்.யின் நிழல் படுகொலை.. திமுக பிரமுகர் உட்பட 8 பேர் கைது!

இந்நிலையில் கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயற்சித்ததாக பூசாரி ஜானகிராமன் செங்கம் காயிதே மில்லத் தெருவை சேர்ந்த மதிவாணன் மற்றும் அறிவு என்ற மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

click me!