என் பொண்ணையே லவ் பண்ணி கல்யாணம் பண்றியா! மருமகனை ஆணவக்கொலை செய்ய கூலிப்படை ஏவிய மாமனார்!
எதிர்ப்பை மீறி மகளை காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை ஏவி ஆணவக்கொலை செய்ய முயற்சித்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

illegal love
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவர் செங்கம் பெங்களூரு ரோட்டில் இயங்கி வரும் வெங்கடேஸ்வரா பெட்ரோல் பங்கில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த காளி கோயில் பூசாரி மகளான ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வேறு வழியியல்லாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு தனி குடித்தனம் நடத்தி வந்தனர். தற்போது ஜெயஸ்ரீ மூன்று மாத கர்ப்பிணையாக இருந்து வருகிறார். தங்களின் எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தையும், காளி கோவில் பூசாரி ஜானகிராமன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் காதல் திருமணத்தை எதிர்த்து வந்த காளி கோயில் பூசாரி தனது மருமகனான விஜி என்பவரை கொலை செய்ய தனது கோவிலுக்கு வரும் இளைஞர்களான சிவா, திருமலை, மதி, ஆகியோரை தனது மகன் ராஜேஷ் உதவியுடன் கூலிப்படையாக தயார் செய்து கொலை செய்ய சில நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளனர்.
இதையும் படிங்க: என் நண்பனே இப்படி செஞ்சா கோவம் வருமா வராதா? அதனால் தான் அட்வகேட்டை ஓட ஒட விரட்டி கொன்றேன்.. குற்றவாளி பகீர்!
இந்நிலையில் நேற்று இரவு விஜி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் விஜியை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியது. இதை தடுக்க அந்த மற்றொரு ஊழியர்களுக்கும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பித்தது. இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜியை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதை அடுத்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கேப் கிடைக்கும் போதெல்லாம் மருமகனுடன் உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி! இறுதியில் நடந்தது என்ன?
Tiruvannamalai
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மகளை காதல் திருமணம் செய்ததால் மாமனாரே மருமகனை கொலை செய்ய திட்டமிட்ட இச்சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.