Vellore Rowdy Murder: சினிமா பாணியில் நடந்த ரவுடி படுகொலை! அலறிய வேலூர்! பதறிய போலீஸ்.. நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Jul 3, 2024, 8:53 AM IST

வேலூர் மாவட்டம் அரியூர் பாரதி தெருவை சேர்ந்தவர் ராஜா என்ற எம்எல்ஏ ராஜா. இவர் மீது கொலை, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஜாமீனில் வெளியே வந்தார். 


வேலூரில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வேலூர் மாவட்டம் அரியூர் பாரதி தெருவை சேர்ந்தவர் ராஜா என்ற எம்எல்ஏ ராஜா. இவர் மீது கொலை, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ராஜாவை காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

Latest Videos

இதையும் படிங்க: நான் கூப்பிடும்போதெல்லாம் வரலைன்னா! ஃபாரின்ல இருக்குற புருஷன் கிட்ட சொல்லிடுவேன்! கள்ளக்காதலன் டார்ச்சர்!

ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: என்ன கழற்றிவிட்டு அவன் கூட போறியா? போட்டுக்கொடுத்த முதல் கள்ளக்காதலன்.. போட்டுத்தள்ளிய மகன்கள்!

 உடனே கொலையாளிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது வல்லம் சுங்கச்சாவடி பகுதியில் கொலையாளிகள் தப்பிச் சென்ற காரை போலீசார் சுற்றி வளைத்தனர். காரில் 4 பேரிடம் விசாரணை நடத்தியதில் அரியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு, அஜித்குமார், ராஜேஷ், தேஜேஷ் என்றும் எம்எல்ஏ ராஜாவை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!