உயிரிழந்த வாலிபர் மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த மீனவர் ராஜா (36) என தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விக்னேஷ் (எ) விக்கி(22), அவரது தம்பி 17 வயது சிறுவன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (51) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அப்பகுதியினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த வாலிபர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் உயிரிழந்த வாலிபர் மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த மீனவர் ராஜா (36) என தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விக்னேஷ் (எ) விக்கி(22), அவரது தம்பி 17 வயது சிறுவன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (51) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்: மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த செல்வம் மனைவி அபூர்வம் (45). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனது மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த குமார் (51), ராஜா (36) ஆகிய 2 பேரிடமும் அபூர்வம் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் குமாருடமான கள்ளத்தொடர்பை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் அபூர்வத்தின் மகன்களிடம் உனது அம்மாவுக்கும், ராஜாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக போட்டுக்கொடுத்தது மட்டுமல்லாமல் தாய், ராஜாவுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் சென்று காண்பித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகன்கள் ராஜாவை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி கருவேலங்காட்டில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமார், விக்கி, அவரது 17வயதான தம்பி ஆகியோரை கைது செய்தனர்.