Chennai Double Murder: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் சல்லி சல்லியாய் இரண்டு பேர் வெட்டி படுகொலை..!

Published : Jul 02, 2024, 09:10 AM ISTUpdated : Jul 02, 2024, 11:52 AM IST
Chennai Double Murder: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் சல்லி சல்லியாய் இரண்டு பேர் வெட்டி படுகொலை..!

சுருக்கம்

சென்னையில் ரவுடி கோஷ்டிகளின் மோதல், முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக கொலை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால், தலைநகர் சென்னை கொலை நகரமாக மாறி வருவதாக கூறிவருகின்றனர். 

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் சுடுகாட்டில் 2 பேர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் ரவுடி கோஷ்டிகளின் மோதல், முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக கொலை சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால், தலைநகர் சென்னை கொலை நகரமாக மாறி வருவதாக கூறிவருகின்றனர். இதனால், சென்னை மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பீதியிலேயே இருந்து வருகின்றனர். 

இதையும் படிங்க: இதற்காக தான் கடலூர் அதிமுக பிரமுகரை ஒட ஒட விரட்டி கொன்றோம்! சென்னையில் கைதானவர்கள் பகீர் தகவல்!

இந்நிலையில், சென்னை அருகே பீர்க்கன்கரணையில் சுடுகாட்டில் 2 பேர் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய அண்ணாமலை என்கிற ஜில்லா மற்றும் தமிழரசன் என்பது தெரியவந்தது. இவர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க:  இது இருக்கிறதுனால தான ஓவரா ஆடுற.. காதலனின் அந்தரங்க உறுப்பை அறுத்து காதலி.. நடந்தது என்ன?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் கொலை நடைபெற்றிருக்கலாம் கூறப்படுகிறது. . இந்த கொலை சம்பவத்தில் சோனை என்கிற கோபாலகிருஷ்ணன் கோஷ்டியினர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். சென்னை புறநகரில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலால் இருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?