எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. சேலத்தில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

By vinoth kumar  |  First Published Jul 4, 2024, 7:44 AM IST

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் (54). இவருக்கு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. நேற்று இரவு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார்.


சேலத்தில் அதிமுக பகுதி செயலாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான முன்னாள் மண்டல குழு தலைவர் சண்முகம் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் (54). இவருக்கு அம்பாள் ஏரி ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. நேற்று இரவு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது தாதகாப்பட்டி இட்டேரி சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சண்முகத்தை சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர். 

Latest Videos

இதையும் படிங்க: Vellore Rowdy Murder: சினிமா பாணியில் நடந்த ரவுடி படுகொலை! அலறிய வேலூர்! பதறிய போலீஸ்.. நடந்தது என்ன?

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் இன ஏராளமான குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.  சண்முகத்தை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், போலீசார், கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:  இதற்காக தான் கடலூர் அதிமுக பிரமுகரை ஒட ஒட விரட்டி கொன்றோம்! சென்னையில் கைதானவர்கள் பகீர் தகவல்!

இக்கொலை குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்?  கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமா அல்லது அரசியல் காழ் புணர்ச்சியா?  தொழில் போட்டியா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சண்முகம், கடந்த 2011 முதல் 2016 வரை, சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் பதவி வகித்தார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!