
கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தனது குழந்தைகளுடன் வந்து அதிர்ச்சி புகார் ஒன்றை தெரிவித்தார். அதாவது, தனது கணவர் கார்த்திகேயன் ஆறு மாதங்களுக்கு முன்பு புற்று நோயால் உயிரிழந்துவிட்டார். பிறகு எங்களை கவனிக்க எந்தவொரு ஆளும் இல்லாமல் தவித்து வருகிறோம்.
தற்போது எந்தவிதமான வருமானமும் இல்லாமல் உணவுக்காகவும் வாழ்க்கைக்காகவும் போராடி வருகிறோம். இப்படிப்பட்ட சூழலில் தனது கணவரின் தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வருகிறார்.அவர் மீது நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாலியல் புகாருக்கு என்ன ஆதாரம் என்று என்னைக் கேட்கிறார்கள்' என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். தனது புகாரை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தார்.
அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுடன் கூட்டத்துக்கு வந்த அவரது மகள் தனது தந்தை இறந்த பிறகு தனது தாத்தா தொடர்ந்து தாய்க்கு பல்வேறு விதமாக பாலியல் தொந்தரவு செய்கிறார் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது எனது தாய்க்கு பாதுகாப்பு தாருங்கள் எனக் கதறினார். இது அங்கு இருந்தவர்கள் மத்தியில் கண்ணீரை வரவழைத்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?
இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?