சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ்(45). இவர் மீது புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
சென்னையில் பட்டப்பகலில் மனைவி கண்முன்னே பிரபல ரவுடி கருக்கா சுரேஷ் ஒட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ்(45). இவர் மீது புளியந்தோப்பு, வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவரது மனைவி விமலா(38). துப்புரவு பணியாளர்.
இதையும் படிங்க;- ஆண்டி, இளம்பெண்கள் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ.. நைட்டில் ரூமில் தனியாக இளைஞர் செய்த காரியம்.!
இந்நிலையில், துப்புரவு பணியில் ஈடுபட்டிக்கொண்டிருந்த மனைவி விமலாவை பார்ப்பதற்காக கணவர் சுரேஷ் வந்துள்ளார். அப்போது, இருவரும் பேசிக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இறங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து கருக்கா சுரேஷ் உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது அந்த கும்பல் அவரை விடமால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தது. இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கருக்கா சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுததியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க;- இரவு முழுவதும் ரூம் போட்டு பள்ளி மாணவி பலாத்காரம்... தலைமை ஆசிரியர் வெறிச்செயல்..!