நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணாலும் நான் கூப்பிடும் போது வரணும்! உல்லாச வீடியோவை காட்டி மிரட்டிய காதலன் தற்கொலை

By vinoth kumar  |  First Published Dec 14, 2022, 9:22 AM IST

திடீரென பிரவீன்குமாரின் காதலி  தன்னை இனிமேல் பார்க்க வர வேண்டாம் என்றும், தனக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத காதலன் அதிர்ச்சியடைந்தார்.


காதலியை நிர்வாண படம் எடுத்து அடிக்கடி மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த இளைஞர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் பிரவீன்குமார் (22). இவர், மறைமலைநகர் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் கல்வாய் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பள்ளியில் படிக்கும்போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், திடீரென பிரவீன்குமாரின் காதலி  தன்னை இனிமேல் பார்க்க வர வேண்டாம் என்றும், தனக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத காதலன் அதிர்ச்சியடைந்தார். இதனால், ஆத்திரமடைந்த காதலன் இருவரும் உல்லாசமாக இருந்த போது எடுத்த நிர்வாண படங்களை வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். 

நீ திருமணம் செய்து கொண்டாலும் நான் கூப்பிடும் போதெல்லாம் என்னுடன் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும் என்று காதலியை மிரட்டி அனுப்பியுள்ளார். இதனால், பயந்துபோன பெண் பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து பிரவீன்குமார் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதை அறிந்து கொண்ட பிரவீன்குமார் மற்றொரு செல்போன் மூலம் அப்பெண்ணை தொடர்பு கொண்டு என்னை போலீசில் சிக்க வைத்து விட்ட உன்னை பழி வாங்குகிறேன் என்று கூறி அப்பெண்ணுடன் இருந்த நிர்வாண படங்களை வாட்ஸ்அப் மூலம் அந்த பெண்ணின் ஊரை சேர்ந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி விட்டு  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரவீன்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை நிறைவு பெற்றதை அடுத்து அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

click me!