ஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டிய கள்ளக்காதலன்.. நடுங்கிபோன இளம்பெண்.!

By vinoth kumar  |  First Published Jun 24, 2022, 7:41 AM IST

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மேலும் குழந்தைகளை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி இளைஞர் கூறியுள்ளார்.


2 குழந்தைகளை பெற்ற தாயிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு பெண்ணை நடுகாட்டில் தவிக்கவிட்டு சென்ற கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொல்லாபுராவில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர், 2 குழந்தைகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதான் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இளம் பெண்ணுக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- யாரு வீட்டு பொண்ண யாரு கல்யாணம் பண்றது.. தகுதி தராதரம் வேணா.. இளைஞரின் தாயை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தை

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மேலும் குழந்தைகளை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி இளைஞர் கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது பேச்சை கேட்டு குழந்தைகளை தவிக்கவிட்டு அந்த இளம்பெண் சந்தோசுடன் சென்றுவிட்டார். 

அப்போது சந்தோஷ், பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதையடுத்து, வனப்பகுதிக்கு சந்தோஷ், இளம் பெண்ணை தற்கொலை செய்யலாம் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து நடுகாட்டில் பெண்ணை அங்கு தனிமையில் விட்டுவிட்டு சந்தோஷ் திடீரென மாயமானார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த பெண் அதிகாலைவரை காட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து, ஒரு வழியாக வீட்டுக்கு வந்து நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பததிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சந்தோஷை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;- அழகிகளை வைத்து ஹைடெக் விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு 20 ஆயிரம் முதல் 30 லட்சம் வரை.. கோடிகளில் புரண்ட பிஸ்னஸ்

click me!