கணபதி சில்க் உரிமையாளர் வில்லங்க காதல்.. நியாயம் கேட்டு போராடிய காதலியை தூக்கிச் சென்ற போலீஸ்..

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2022, 12:14 AM IST
Highlights

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தை காட்டி கற்பழித்து ஏமாற்றிய துணி கடை உரிமையாளர் மகனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த பெண் போலீசாரால் குண்டுகட்டாக தூக்கி சென்றுள்ளனர். 

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தை காட்டி கற்பழித்து ஏமாற்றிய துணி கடை உரிமையாளர் மகனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த பெண் போலீசாரால் குண்டுகட்டாக தூக்கி சென்றுள்ளனர். இது தொடர்பான பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. காவல் துறையில் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். 

தேனி மாவட்டம் கமகபட்டியை சேர்ந்தவர் மேனகா (29). பட்டதாரியான இவர் கடந்த 3 ஆண்டுகளாக தேனி கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்து வந்தார். அப்போது துணி கடை உரிமையாளர் மாரியப்பனின் மகன் முருகன் (32) என்பவருடன்   மேனகாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி முருகன் அடிக்கடி மேனகாவுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். ஆனால் திடீரென மார்ச் 5ஆம் தேதி  முருகனுக்கும் சின்னமனூரைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இது குறித்து கேள்விப்பட்ட மேனக பயங்கர அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து முருகனிடம் கேட்டபோது, நிச்சயதார்த்தம் தான் நடந்தது உண்மையில் உன்னைதான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறி சமாதானம் செய்துள்ளார்.

பின்னர் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி பி.சி பட்டியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து முருகன் மேனகா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் மேகனாகாவை வீட்டில் விட்டுச் சென்ற முருகன் திரும்பவும் வரவே இல்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது, அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் மேனகா அது குறித்து காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார். அந்த வழக்கில் முருகனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர், 14 நாட்கள் சிறையில் இருந்து முருகன் ஜாமினில் வெளிவந்து மீண்டும் தலைமறைவானார். 

இந்நிலையில் சிலர் மூலம் முருகன் மேனகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிகிறது. அதேநேரத்தில் முருகன் சின்னமானூர் ஓட்டல் உரிமையாளரின் மகளை திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த மேனகா முருகனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கணபதி சில்க்ஸ்சில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தார். இது தொடர்பான செய்திகள் பரபரப்பாக வெளியாகி வந்தது. 

அவரது போராட்டம் 21 நாட்களை எட்டிய நிலையில் திடீரென்று அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர், தான் இங்கு அமைதியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் தன்னை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் மேனகா போலீசாரிடம் வாக்கு வாத த்தில் ஈடுபட்டார். ஆனால் போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இந்நிலையில் மேனகா பெரியகுளம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

கணபதி சில்க்ஸ் உரிமையாளர் தூண்டுதலின் பேரில் தன்னை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நீதி கேட்டுப் போராடும் ஒரு பெண்ணை தூக்கிச் சென்ற போலீசார், அந்த பெண்ணை கற்பழித்து விட்டு தலைமறைவாக உள்ள துணிக்கடை அதிபரின் மகனை ஏன் கைது செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 

click me!