திமுக MP திருச்சி சிவா மகன் சூர்யாசிவா கைது.. பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Jun 23, 2022, 5:49 PM IST
Highlights

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வின் மகன் சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வின் மகன் சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் கைதாகியுள்ளார். தனியார் பேருந்து மோதியதில் தனது காருக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தை எவ்வழியோ அதற்கு நேர் எதிர் வழிதான்  தன் வழி என செயல்பட்டு வருபவர் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. சமீபத்தில் திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளார். ஓபிசி பிரிவு பொதுச் செயலாளராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் பாஜகவில் சேர்ந்த பின்னரே திருச்சி சிவாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? இப்படி ஒரு மகனா என பலரையும் வாய்பிளக்க வைத்தார் சூர்யா சிவா.

இதையும் படியுங்கள்: "பதவி வெறி எடப்பாடி கண்ணை மறைத்து விட்டது.. பொது குழுவா அது, காட்டுமிராண்டி கூட்டம்.. டார் டாரா கிழித்த வைத்தி

இவரை நன்கு அறிந்தவர்கள் மத்தியில் வில்லங்கப் பேர்வழி என்றே பெயர் எடுத்து வந்துள்ளார் சூர்யா சிவா. பாஜகவில் சேர்ந்து தனது தந்தையையே கடுமையாக விமர்சித்தார்வர் ஆவார். திமுகவில் குடும்ப அரசியல் நடக்கிறது, உழைப்பவர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் இல்லை என சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இவரின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது.

திருச்சி சிவாவின் மகன் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்தேன், இதோ பாஜகவில் சேர்ந்தவுடன் யார் என்று தெரிந்து விட்டானே... இனிதான் ஆட்டம் ஆரம்பம் என அமர்க்களமாக பேட்டி கொடுத்து வந்தார் சூர்யா சிவா. குடும்பத்துக்கு அடங்காதவர்,  பொது இடங்களிலும் வம்பு இழுப்பதில் வல்லவர் எனபது இவருடன் பழகியவர்கள் இவருக்கு கொடுக்கும் பட்டம். அதற்கேற்றார்போல தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் சூர்யா, முன்னதாக

கடந்த 2020ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மது போதையில் தகராறு செய்தார் என்பதற்கான வழக்கு இவர் மீது உள்ளது.நட்சத்திர ஓட்டலில் மது போதையில் ஸ்ரீராம் என்பவரை மது வாங்கி வரச்சொல்லி தகராறு செய்ததாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த சில மாதங்களே ஆன நிலையில் மற்றொரு சிக்கலில் சிக்கி உள்ளார் சூர்யா. 

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக் குழுவா? வாய்ப்பு இல்ல ராஜா.. EPS கோட்டையில் வெடி வைத்த வைத்தியலிங்கம்.

கடந்த 11ஆம் தேதி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சூர்யாவின் கார் மீது தனியார் ஆம்னி பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியது. அப்போது அந்த டிரைவரை மிரட்டி பஸ்சை எடுத்து சென்றதாக அவர் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் சூர்யா சிவாவை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து திருச்சி பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!